தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Showing posts with label Dist TNHSPGTA News. Show all posts
Showing posts with label Dist TNHSPGTA News. Show all posts
Saturday, 23 March 2013
State General Body Meet at Karur on 23/02/2013
Labels:
Dist TNHSPGTA News
Wednesday, 5 September 2012
மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் செப்டம்பர் 2012
04/09/2012 அன்று மாலை 6.00 மணியளவில் கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டப் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. மாற்றுப் பணிக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் போது விதி முறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், விதிமுறைகளுக்கு மாறாக தற்போது மாற்றுப் பணியில் நியமனம் செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான செயல்முறைகளை கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ரத்து செய்திட வேண்டும்.
2. மார்ச் 2012 மேல்நிலை வகுப்பு செய்முறைப் பொதுத் தேர்விற்கான உழைப்பூதியமானது அரசுத் தேர்வுகள் துறையால் ஏற்கனவே மாவட்டத்திற்கு வழங்கப்பட்டதை கால தாமதம் செய்யாமல் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உடனே வழங்க வேண்டும்.
3. கடந்த மற்றும் தற்போதைய கல்வியாண்டுகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பணி நிறைவு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குபாராட்டு விழாவும், 2012 மார்ச் மேல்நிலைப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் மாநிலத் தலைவரின் ஒப்புதலோடு விரைவில் நடத்துவது.
Labels:
Dist TNHSPGTA News
Tuesday, 24 July 2012
ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் கழகமும் இணைத்து நடத்திய ஆர்ப்பாட்டம்.
மாவட்டக் கல்வி
அலுவலர் மாறுதலிலோ அல்லது பணிநிறைவு பெற்றும் செல்லும் பொழுதோ மாவட்டக் கல்வி அலுவலர்
பொறுப்பினை மாவட்டக் கல்வி அலுவலருக்கு இணையாக உள்ள மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு
வழங்குவது என்பது இதுநாள் வரை கடைபிடித்து வரும் மரபாக உள்ளது.
இந்த மரபு மீறப்படும்
வகையில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியருக்கு கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு வழங்கியதனை கண்டித்து, கரூர்
மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகமும், கரூர் மாவட்ட தமிழ்நாடு
மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகமும் இணைத்து கரூர் வட்டாட்சியர்
அலுவலகம் முன்பு 16.07.2012 மாலை 5.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் தன்மானம் காத்திட பெருந்திரளாய் தலைமையாசிரியப் பெருமக்களும், முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
திரு சு.வெங்கடாச்சலம்,
மாவட்டப் பொருளாளர், TNHSSHMA கரூர் மாவட்டம்
அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்,
திரு நா.கருணாகரன்,
மாவட்டத் தலைவர், TNHSSHMA, கரூர் மாவட்டம்
அவர்கள் தலைமையேற்றார்,
திரு இராஜேந்திரன்,
TNHSSHMA நாமக்கல் மண்டலச் செயலாளர் அவர்களும் மற்றும்
திருமதி ஓ.சந்திரா,
TNHSSHMA கரூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
திரு என்.மணி,
TNHSSHMA மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் கண்டனப் பேருரை ஆற்றினார்.
திரு க.கனராசு,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, ஜெகதாபி அவர்களும்,
திரு மா.தேவராசு,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, பெரியகுளத்துப் பாளையம் அவர்களும்,
திரு கே.செல்வராசு,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, உப்பிடமங்களம் அவர்களும்,
திரு எம்.சுப்பிரமணி,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, மலைக்கோவிலூர் அவர்களும்,
திரு பி.லோகநாதன்,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, க.பரமத்தி அவர்களும்,
திரு எஸ்.கார்த்திகேயன்,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, தம்மாநாயக்கன்பட்டி அவர்களும்,
திரு தனசேகரன்,
தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, தும்பிவாடி அவர்களும்,
திரு மா.ஆறுமுகம்,
TNHSPGTA கரூர் மாவட்டத் தலைவர் அவர்களும்,
திரு எஸ்.தீனதயாளன்,
TNHSPGTA கரூர் மாவட்டச்
செயலாளர் அவர்களும்,
திரு பி.பெரியசாமி,
TNHSPGTA கரூர் மாவட்டப்
பொருளாளர் அவர்களும்,
திரு பி.சக்திவேல்,
TNHSPGTA மாநிலத் துணை தலைவர்
அவர்களும்,
திரு சி.பழனிச்சாமி,
TNHSPGTA கரூர் மாவட்ட அமைப்புச்
செயலாளர் அவர்களும்,
வாழ்த்துரை வழங்கினார்கள்.
திரு சீ.கருப்புசாமி,
TNHSSHMA கரூர் மாவட்ட
அமைப்புச் செயலாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Labels:
Dist TNHSPGTA News
Monday, 25 June 2012
மாநிலச் செயலாளருக்கு வாழ்த்து
Labels:
Dist TNHSPGTA News
Saturday, 23 June 2012
வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு மேல்நிலைப் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அரசு
மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருமான திரு
க.கனகராசு அவர்கள் கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கரூர் மாவட்ட மேல்நிலைப்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மூத்த உறுப்பினரும் அரவக்குறிச்சி அரசு
மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியை திருமதி
பூங்கோதை அவர்கள் சின்னத்தாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியையாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கரூர் மாவட்ட மேல்நிலைப்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் உறுப்பினரும், கரூர் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியின் வரலாறு பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருமான திரு
பரமசிவம் அவர்கள் மேலச் சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக
பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கரூர் மாவட்ட மேல்நிலைப்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் உறுப்பினரும், கரூர் நகராட்சி மேல்நிலைப்
பள்ளியின் இயற்பியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருமான திரு சிவராஜ்
அவர்கள் தஞ்சாவூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு
பெற்றுள்ளார்.
மேல்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
மாநிலக் கழகமும், மாவட்டக் கழகமும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
Labels:
Dist TNHSPGTA News
இரங்கல் செய்தி
கரூர் மாவட்ட மேல்நிலைப் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் தலைமையிடச் செயலாளரும் சின்னத்தாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திரு எஸ்.தர்மலிங்கம் அவர்களின்
தாயார் திருமதி எஸ்.நல்லம்மாள் அவர்கள் 09/06/2012 சனிக் கிழமையன்று இயற்கை
எய்தினார். அன்னாரின் குடும்பத்திற்கு மாநிலக் கழகமும், மாவட்டக் கழகமும் ஆழ்ந்தி
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
Labels:
Dist TNHSPGTA News
Saturday, 21 April 2012
GATE MEETING HELD ON 12/04/2012 AT KARUR, CHERAN M.H.S.SCHOOL.
Labels:
Dist TNHSPGTA News
Wednesday, 18 April 2012
An appeal to Director of Govt Examinations
உயிரியல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது ஏற்படும் இடற்பாடுகளைக் களையக்கோரி அரசுத் தேர்வுகள் இயக்குனர் அவர்களுக்கு கரூர் மாவட்ட உயிரியல் பாட ஆசிரியர்கள் சார்பாக அனுப்பி வைத்த கடிதத்தின் நகல்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வு தாவரவியல் பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக தலைமைத் தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் மற்றும் உதவித் தேர்வாளராக நாங்கள் நிமிக்கப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் நடைபெற்ற மைய மதிப்பீட்டுப் பணிகளில் நாள் ஒன்றுக்கு 40 உயிரியல் பாட விடைத்தாள்களை மதிப்பீடு செய்துள்ளோம்.
நாள் ஒன்றுக்கு 40 விடைத்தாட்களை மதிப்பீடு செய்வது என்பது மிகவும் சுமையான பணியாகும். ஒவ்வொரு மாணவரும் சராசரியாக 20 முதல் 30 பக்கங்கள் வரை எழுதுகிறார். ஒரு பக்கத்திற்கு 30 வினாடிகள் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு விடைத்தாளை மதிப்பீடு செய்ய 10 முதல் 15 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் விடைத்தாளின் முதல் பக்கத்தில் வினாவாரி, பக்கவாரி மதிப்பெண்களை பதிவு (mark posting) செய்தும் அப்பதிவை கூட்டிப்போடவும் ஒரு விடைத்தாளுக்கு குறைந்த பட்சம் 6 முதல் 8 நிமிடங்கள் தேவை. ஒரு விடைத்தாளை முழுமையாக மதிப்பீடு செய்ய 20 முதல் 25 நிமிடங்கள் தேவைப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 3 அல்லது 4 விடைத்தாட்களே மதிப்பீடு செய்ய இயலும். எனவே நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாட்களே அதிகம். இச்சூழலில் நாள் ஒன்றுக்கு 40 என்பதைக் குறைத்து 30 விடைத்தாட்கள் மட்டும் வழங்கப்பட்டால் எங்கள் பணியும் சிறப்பாக இருக்கும்; மாணவர் நலனும் பாதுகாக்கப்படும்.
ஒரு தலைமைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளருக்கு 6 உதவித் தேர்வாளர்கள் நிமிக்கப்படுகின்றனர். ஒரு உதவித் தேர்வாளருக்கு 40 விடைத்தாட்கள் என்ற கணக்கில் 6 உதவித்தேர்வாளர்களுக்கு வழங்கப்படும் 240 விடைத்தாட்களும் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, வினாவாரி, பக்கவாரி மதிப்பெண்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு தலைமைத் தேர்வாளருக்கு மற்றும் கூர்ந்தாய்வாளருக்கு ஒரு விடைத்தாளுக்கு தலா 5 நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் 240 விடைத்தாட்களுக்கு 20 மணி நேரம் தேவைப்படுகிறது அல்லவா? இதுநாள் வரை தங்கள் ஆணைக்கிணங்க இவைகள் அணைத்தும் 10 முதல் 12 மணி நேரங்களில் மிகுந்த மனஅழுத்தத்துடன் செய்து முடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதிப்பீட்டில் சில தவறுகள் நடந்து விடுவதால் மாணவர் நலம் பாதிக்கப்படுவதோடு, எங்களுக்கும் மனஉளைச்சலும் குற்ற உணர்வும் உண்டாகி விடுகிறது.
ஆகவே, மாணவர் நலனையும் எங்கள் நலனையும் காத்திட நாள் ஒன்றுக்கு உயிரியல் பாடத்திற்கு ஒரு உதவித் தேர்வாளருக்கு 30 விடைத்தாட்களும் மதிப்பெண்களை பதிவு செய்ய தனித்தாள் வழங்கியும் ஒரு தலைமைத் தேர்வாளர் மற்றும் ஒரு கூர்ந்தாய்வாளருக்கு 4 உதவித் தேர்வாளர்களை மட்டும் நியமித்தும், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மாணவர்களை Coding Sheet மூலம் (as Computer Science subject) விடை எழுதவும் ஆவன செய்ய வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Labels:
Dist TNHSPGTA News
Monday, 9 January 2012
புதிய வரவு
Labels:
Dist TNHSPGTA News
Sunday, 18 December 2011
Welcome meet
கடந்த 09/11/2011 அன்று மாலை கரூர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரை தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு செ.தீனதயாளன் அவர்கள் நினைவுப் பரிசு அளிக்கிறார்.
மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு செ.தீனதயாளன் அவர்கள் நினைவுப் பரிசு அளிக்கிறார்.
மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.
Labels:
Dist TNHSPGTA News
Subscribe to:
Posts (Atom)