தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Showing posts with label JAC NEWS. Show all posts
Showing posts with label JAC NEWS. Show all posts
Thursday, 3 March 2011
KARUR & NAMAKKAL DISTRICT TNHSPGTA MEETING
Our Association meeting for Karur and Namakkal Districts will be held on 06-02-2011 Sunday 10.00 am at GHSS, Namakkal South. Our State president Mr V.Manivasagan will deliver his speech. So all the members are invite to attend the meeting.
M.Devaraju, Dt. President.
Sunday, 27 February 2011
27/02/2011 அன்று JAC சார்பில் நடைபெற்ற மறியலில் சில காட்சிகள்
27/02/2011 அன்றைய மறியலின் துவக்கம்
சாலை மறியல் துவங்குகிறது
கைது நடைபெறுகிறது
கரூர் நாரத கான சபாவினுள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தலைமையாசிரியர் திரு இராமலிங்கம் அவர்கள் உரையாற்றுகிறார்
TNHSPGTA வின் மாநிலத் துணைத் தலைவர் திரு ஆறுமுகம் அவர்கள் உரையாற்றுகிறார்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியை திருமதி விஜயலட்சுமி அவர்கள் உரையாற்றுகிறார்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திரு நாராயணன் அவர்கள் உரையாற்றுகிறார்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்திரு ஜான் அவர்கள் உரையாற்றுகிறார்
TNHSPGTA வின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு கே.கனகராசு அவர்கள் உரையாற்றுகிறார்
ஏன் இந்தப் போராட்டம்?
ஏன் இந்தப் போராட்டம்?
அறிவுசால் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களே!,
ஆற்றல்சார் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியப் பெருமக்களே!
நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
10/11/2010 ல் மாநிலம் முழுவதும் சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினோம்.
11/12/2010 மண்டல அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தினோம்.
25/01/2011 ல் நமது கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்மட்டக் குழு மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஒரு மாதம் முன்பே அறிவிப்பினை அரசுக்கு கொடுத்தோம். ஆனால் பலனில்லை.
நமது கோரிக்கைகளின் நியாயங்களைப் புரியாதவர்களுக்கும், நமது வேதனைகளை அறியாதவர்களுக்கும் இதனை நகல் எடுத்துக் கொடுங்கள். நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை பொறுத்துக் கொண்டு எப்படி? நாம் நமது பணியினை ஆற்ற முடியும் என்பதை அவர்கள் அறியட்டும்.
1. 1996 ல் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிக்கு வந்தவர்கள் 15 ஆண்டுகளாக அதே பணியில் பதவி உயர்வு ஏதுமின்றி விரக்தியுடன் உள்ளனர்.
மேற்காண் தலைமையாசிரியரிகளிடம் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள் 2004-2005 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவியுயர்வு பெற்று பிறகு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று, தான் பணியாற்றி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கே உயர் அதிகாரிகளாக வரும் அவல நிலை.
2. அவர்கள் பதவி உயர்வு பெறுவதை நாம் குறை கூறவில்லை. நமக்கு நெடுங்காலமாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பதையும், இயற்கைக்கு முரணாக கீழ்நிலைப் பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பணிக்கு மேலே உள்ளவர்களுக்கு அதிகாரிகளாக வருகின்ற அபத்தத்தால் நமக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நம்மை இத்தகைய போரட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
3. 1988 ல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்ற பலரும் 22 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பதவி உயர்வும் இல்லாமல் உள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் வேறு எந்தத் துறையிலும் இல்லை.
4. மேற்காண் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிறகு பணிநியமனம் பெற்ற வேறு வகை ஆசிரியர்கள் பலவேறு பதவி உயர்வுகளை பெற்றுள்ளனர். இவையெல்லாம் தமிழக அரசின் வேறு வேறு அரசுத் துறைகளில் நடக்கின்ற குளறுபடிகள் அல்ல. அறிவுபுகட்டுகின்ற தமிழக அரசு கல்வித் துறையில் மட்டும்தான் நடைபெறுகிறது.
5. முந்தைய ஊதியக் குழு வரை நமக்கான ஊதியத்திற்கு சமமாக மற்றும் நமது ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் பெற்று வந்தவர்களுக்கு தற்போதை ஊதியக் குழுவில் நம்மைவிட அதிகமான ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசில் மனித வள மேம்பாட்டில் பல அளப்பறிய பணியினை செய்து வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை குறைத்து மதிப்பிட்டு செயல்படுவது எவ்வகையில் நியாயம்?
6. நாம் சம்பள உயர்வு கோரவில்லை, சம்பள நிர்ணயத்தில் சமநிலைதானே கேட்கிறோம்.
ஆகவே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியகளே, மேல்நிலைப் பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களே நாம் மேற்கொண்டிருப்பது போரரட்டமல்ல, தர்மயுத்தம் என்பதை மறவாதீர். அனைவரும் ஒன்றாய் கூடி நமது வேதனைகளை அரசுக்குத் தெரிவிப்போம் வாரீர்.
Thursday, 17 February 2011
மாநிலத் தலைவரின் அறிவிப்பு
Sunday, 13 February 2011
13-02-2011 அன்று நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
Thursday, 10 February 2011
வேலை நிறுத்தத்திற்கு விருப்பக் கடிதம் பெற்றது
JAC செய்தி.
கீழ்காணும் குழுவினர் 11/02/2011 மற்றும் 14/02/2011 அன்று சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான கடிதங்களை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து பெற்று வந்தனர்.
1.திரு ந.கருணாகரன், தலைவர், T.N.H.S.S.H.M.A., கரூர் அவர்கள் மற்றும் திரு செ.தீனதயாளன், மாவட்டச் செயலாளர், T.N.H.S.P.G.T.A., கரூர் அவர்கள் தலைமையிலான குழு தாந்தோணிமலை துவங்கி கரூர் நகரப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
2.திரு க.கனகராசு, மாநிலச் செயலாளர், T.N.H.S.P.G.T.A., அவர்கள், திரு மா.ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவர், T.N.H.S.P.G.T.A., அவர்கள் மற்றும் திரு சி.கருப்புசாமி, தலைமையாசிரியர், அ.மே.நி.பள்ளி, அரவக்குறிச்சி ஆகியோர் தலைமையிலான குழு பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
3. திரு இராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான குழு புன்னம்,நொய்யல்,புகழூர்,வாங்கல்,நெரூர்,அரங்கநாதன்பேட்டை ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
4.திரு பெ.பெரியசாமி அவர்கள் தலைமையிலான குழு குளித்தலை வட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
5.திரு ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான குழு கிருட்டிணராயபுரம் வட்டத்திலுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
3. திரு இராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான குழு புன்னம்,நொய்யல்,புகழூர்,வாங்கல்,நெரூர்,அரங்கநாதன்பேட்டை ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
4.திரு பெ.பெரியசாமி அவர்கள் தலைமையிலான குழு குளித்தலை வட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர்.
5.திரு ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான குழு கிருட்டிணராயபுரம் வட்டத்திலுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
Wednesday, 9 February 2011
JAC NEWS
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு.
அன்புடையீர் வணக்கம்,
நமது கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் 25/01/2011 அன்று சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்:-
1. 26/02/2011 சனிக் கிழமை மற்றும் 27/02/2011 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.
2. 28/02/2011 திங்கட் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம்.
3. 13/02/2011 ஞாயிற்றுக் கிழமையன்று அனைத்து மாவட்டங்களிலும் மறியல் ஆயத்தக் கூட்டங்களை நடத்துதல்.
4. 13/02/2011 அன்று கரூரில் நடைபெறவுள்ள மறியலில் மாநில கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்ள உள்ளவர் திரு எம்.மாசானம், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோழவந்தான், மதுரை மாவட்டம்.
5. மறியல் தொடர்பான சில முக்கியக் குறிப்புகள்
அ. 26/02/2011 சனிக்கிழமை மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொள்ளும் மாவட்டங்களில் மூன்று சங்க அமைப்பாளர்கள் பங்கேற்று சிறை செல்லுதல்.
ஆ. 27/02/2011 ஞாயிற்றுக் கிழமை 3 அமைப்புகளின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தவிர பொருளாளர் அல்லது அமைப்புச் செயலாளர் தலைமையில் சிறை செல்லுதல்.
இ. 28/02/2011 அன்று 3 அமைப்புகளில் 27/02/2011 அன்று கலந்து கொள்ளாத பிற மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் அல்லது அமைப்புச் செயலாளர் தலைமையில் சிறை செல்லுதல்.
ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்.
இப்படிக்கு,
ஆ.சின்னதுரை,
மாநில செய்தி தொடர்பாளர்,
Subscribe to:
Posts (Atom)