தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Wednesday, 18 April 2012
An appeal to Director of Govt Examinations
உயிரியல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது ஏற்படும் இடற்பாடுகளைக் களையக்கோரி அரசுத் தேர்வுகள் இயக்குனர் அவர்களுக்கு கரூர் மாவட்ட உயிரியல் பாட ஆசிரியர்கள் சார்பாக அனுப்பி வைத்த கடிதத்தின் நகல்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வு தாவரவியல் பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக தலைமைத் தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் மற்றும் உதவித் தேர்வாளராக நாங்கள் நிமிக்கப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் நடைபெற்ற மைய மதிப்பீட்டுப் பணிகளில் நாள் ஒன்றுக்கு 40 உயிரியல் பாட விடைத்தாள்களை மதிப்பீடு செய்துள்ளோம்.
நாள் ஒன்றுக்கு 40 விடைத்தாட்களை மதிப்பீடு செய்வது என்பது மிகவும் சுமையான பணியாகும். ஒவ்வொரு மாணவரும் சராசரியாக 20 முதல் 30 பக்கங்கள் வரை எழுதுகிறார். ஒரு பக்கத்திற்கு 30 வினாடிகள் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு விடைத்தாளை மதிப்பீடு செய்ய 10 முதல் 15 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் விடைத்தாளின் முதல் பக்கத்தில் வினாவாரி, பக்கவாரி மதிப்பெண்களை பதிவு (mark posting) செய்தும் அப்பதிவை கூட்டிப்போடவும் ஒரு விடைத்தாளுக்கு குறைந்த பட்சம் 6 முதல் 8 நிமிடங்கள் தேவை. ஒரு விடைத்தாளை முழுமையாக மதிப்பீடு செய்ய 20 முதல் 25 நிமிடங்கள் தேவைப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 3 அல்லது 4 விடைத்தாட்களே மதிப்பீடு செய்ய இயலும். எனவே நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாட்களே அதிகம். இச்சூழலில் நாள் ஒன்றுக்கு 40 என்பதைக் குறைத்து 30 விடைத்தாட்கள் மட்டும் வழங்கப்பட்டால் எங்கள் பணியும் சிறப்பாக இருக்கும்; மாணவர் நலனும் பாதுகாக்கப்படும்.
ஒரு தலைமைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளருக்கு 6 உதவித் தேர்வாளர்கள் நிமிக்கப்படுகின்றனர். ஒரு உதவித் தேர்வாளருக்கு 40 விடைத்தாட்கள் என்ற கணக்கில் 6 உதவித்தேர்வாளர்களுக்கு வழங்கப்படும் 240 விடைத்தாட்களும் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, வினாவாரி, பக்கவாரி மதிப்பெண்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு தலைமைத் தேர்வாளருக்கு மற்றும் கூர்ந்தாய்வாளருக்கு ஒரு விடைத்தாளுக்கு தலா 5 நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் 240 விடைத்தாட்களுக்கு 20 மணி நேரம் தேவைப்படுகிறது அல்லவா? இதுநாள் வரை தங்கள் ஆணைக்கிணங்க இவைகள் அணைத்தும் 10 முதல் 12 மணி நேரங்களில் மிகுந்த மனஅழுத்தத்துடன் செய்து முடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதிப்பீட்டில் சில தவறுகள் நடந்து விடுவதால் மாணவர் நலம் பாதிக்கப்படுவதோடு, எங்களுக்கும் மனஉளைச்சலும் குற்ற உணர்வும் உண்டாகி விடுகிறது.
ஆகவே, மாணவர் நலனையும் எங்கள் நலனையும் காத்திட நாள் ஒன்றுக்கு உயிரியல் பாடத்திற்கு ஒரு உதவித் தேர்வாளருக்கு 30 விடைத்தாட்களும் மதிப்பெண்களை பதிவு செய்ய தனித்தாள் வழங்கியும் ஒரு தலைமைத் தேர்வாளர் மற்றும் ஒரு கூர்ந்தாய்வாளருக்கு 4 உதவித் தேர்வாளர்களை மட்டும் நியமித்தும், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மாணவர்களை Coding Sheet மூலம் (as Computer Science subject) விடை எழுதவும் ஆவன செய்ய வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment