தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Wednesday, 7 March 2012
அரசாணை எண் 720 க்கான ஒரு நபர் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்,
கரூர் மாவட்டம்.
மேல்நிலைக் குரலுக்கான செய்தி.
06/03/2012 செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீழ் காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திரு மா.ஆறுமுகம் அவர்கள் தலைமையேற்றார், மாவட்டச் செயலாளர் திரு செ.தீனதயாளன், மாவட்டப் பொருளாளர் திரு பெ.பெரியசாமி, மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு செ.பழனிச்சாமி, மாவட்ட தலைமையிடச் செயலளாளர் திரு சோ.தர்மலிங்கம், மகளிரணிச் செயலாளர் திருமதி சி.விஜயலட்சுமி, மாவட்ட உதவி பெறும் பள்ளிகளுக்கான செயலாளர் திரு எஸ்.பாபுலிங்கன், மாவட்ட ஆதி திராவிடப் பள்ளிகளுக்கான செயலளார் திரு க.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலளார் திரு க.கனகராசு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் திரு ப.சக்திவேல், மாவட்டத் துணைத் தலைவர் திரு எஸ்.சிவராஜ், மாவட்டத் துணைத் தலைவர் திரு வை.முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர் திரு எஸ்.சுந்தரவதனம், மாவட்ட இணைச் செயலாளர் திரு பி.மனோகரன், மாவட்ட பிரச்சார செயலாளர் திரு மா.சக்திவேல், கல்வி மாவட்ட இணைச் செயலாளர் திரு இரா.சாமியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு வ.த.சண்முகசுந்தரம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு கோ.ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் திரு சு.தமிழ்மணி, கரூர் நகரத் தலைவர் திரு எல்.ஜான் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரை ஆற்றினர். இறுதியாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு தாஜூதின் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 25 பெண் ஆசிரியைகள் உட்பட சுமார் 100 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் திரு க.கனராசு அவர்கள் கீழ்காணும் கோரிக்கைளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வு வினாத்தாள் மதிப்பீடு செய்யும் பணியின் போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
கோரிக்கைகள்:
Ø அரசாணை எண் 720 சார்பாக 01/03/2010 அன்று அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையினை வெளியிட்டு, அதனை உடனே நடைமுறைப்படுத்திட வேண்டும்.
Ø மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபரியும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
Ø முதுநிலைப் பட்டதாரி ஆசிரியகளுக்கு தற்போது உள்ள தர ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
********************************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment