தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Tuesday, 5 April 2011
STORY OF 360 DEGREE
360 டிகிரி பிறந்த கதை
கி.பி. 2400 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வட்டத்தை 360 டிகிரி கோணங்களாகப் பிரித்து கணக்கிட்டவர்கள் மெசபட்டோமியர் (தற்கால தெற்கு ஈராக்) 30 நாட்களை அடிப்படையாகக் கொண்ட 12 மாதங்களை உள்ளடக்கியது ஒரு ஆண்டு என்றும் கணக்கிட்டு ஒரு ஆண்டிற்கு 360 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளனர்.. இவர்கள்தான் நேரத்தையும், கோணங்களையும் கணக்கிடுவதற்கான அலகுகளை (Units) கண்டறிந்துள்ளனர். சூரியன் பூமியை சுற்றி வருவதாக அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு சூரியன் பூமியை சுற்றி வருவதற்கு 360 நாட்கள் ஆகிறது என்று கணக்கிட்டார்கள். பூமியை சுற்றும் சூரியனின் பாதை வட்டமாக இருக்கிறது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆகவே ஒரு வருடத்திற்கும் ஒரு முழு வட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி வட்டத்தை 360 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு அலகும் ஒரு நாளைக் குறிப்பதாகக் கணக்கிட்டார்கள். சூரியக் கடிகாரத்தைக் (Sun Dial) கொண்டு நேரத்தை அறிந்தவர்களும் இவர்களே.
கோணத்தைக் கண்டறிய 360 டிகிரி தத்துவத்தையே நாம் தற்போது பின்பற்றி வருகிறோம் என்றாலும் நாம் பின்பற்றுவது 365 நாட்களை உள்ளடக்கிய வருடக் கணக்கீடாகும். கணக்கிடும் முறைக்கு 10 ஐ அடிப்படையினையே நாம் தற்போது பின்பற்றி வருகிறோம்.
கி.பி. 1500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். ஆனால் இந்த 24 மணி நேரங்களும் சமமானதாக இல்லாமல் பருவ காலத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டும் இருந்துள்ளது. அதன் பிறகு கிரேக்கர்கள்தான் 24 மணி நேரங்களை சம கால அளவாக கணக்கிடும் முறையை கண்டறிந்துள்ளார்கள்.
சுமார் கி.பி. 100 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர்கள் 1 மணிக்கு 60 நிமிடங்கள் என்றும், 1 நிமிடத்திற்கு 60 நொடிகள் என்றும் கணக்கிடும் முறையை கொண்டு வந்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment