தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Sunday, 27 February 2011
ஏன் இந்தப் போராட்டம்?
ஏன் இந்தப் போராட்டம்?
அறிவுசால் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களே!,
ஆற்றல்சார் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியப் பெருமக்களே!
நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
10/11/2010 ல் மாநிலம் முழுவதும் சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினோம்.
11/12/2010 மண்டல அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தினோம்.
25/01/2011 ல் நமது கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்மட்டக் குழு மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஒரு மாதம் முன்பே அறிவிப்பினை அரசுக்கு கொடுத்தோம். ஆனால் பலனில்லை.
நமது கோரிக்கைகளின் நியாயங்களைப் புரியாதவர்களுக்கும், நமது வேதனைகளை அறியாதவர்களுக்கும் இதனை நகல் எடுத்துக் கொடுங்கள். நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை பொறுத்துக் கொண்டு எப்படி? நாம் நமது பணியினை ஆற்ற முடியும் என்பதை அவர்கள் அறியட்டும்.
1. 1996 ல் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிக்கு வந்தவர்கள் 15 ஆண்டுகளாக அதே பணியில் பதவி உயர்வு ஏதுமின்றி விரக்தியுடன் உள்ளனர்.
மேற்காண் தலைமையாசிரியரிகளிடம் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள் 2004-2005 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவியுயர்வு பெற்று பிறகு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று, தான் பணியாற்றி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கே உயர் அதிகாரிகளாக வரும் அவல நிலை.
2. அவர்கள் பதவி உயர்வு பெறுவதை நாம் குறை கூறவில்லை. நமக்கு நெடுங்காலமாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பதையும், இயற்கைக்கு முரணாக கீழ்நிலைப் பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பணிக்கு மேலே உள்ளவர்களுக்கு அதிகாரிகளாக வருகின்ற அபத்தத்தால் நமக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நம்மை இத்தகைய போரட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
3. 1988 ல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்ற பலரும் 22 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பதவி உயர்வும் இல்லாமல் உள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் வேறு எந்தத் துறையிலும் இல்லை.
4. மேற்காண் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிறகு பணிநியமனம் பெற்ற வேறு வகை ஆசிரியர்கள் பலவேறு பதவி உயர்வுகளை பெற்றுள்ளனர். இவையெல்லாம் தமிழக அரசின் வேறு வேறு அரசுத் துறைகளில் நடக்கின்ற குளறுபடிகள் அல்ல. அறிவுபுகட்டுகின்ற தமிழக அரசு கல்வித் துறையில் மட்டும்தான் நடைபெறுகிறது.
5. முந்தைய ஊதியக் குழு வரை நமக்கான ஊதியத்திற்கு சமமாக மற்றும் நமது ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் பெற்று வந்தவர்களுக்கு தற்போதை ஊதியக் குழுவில் நம்மைவிட அதிகமான ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசில் மனித வள மேம்பாட்டில் பல அளப்பறிய பணியினை செய்து வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை குறைத்து மதிப்பிட்டு செயல்படுவது எவ்வகையில் நியாயம்?
6. நாம் சம்பள உயர்வு கோரவில்லை, சம்பள நிர்ணயத்தில் சமநிலைதானே கேட்கிறோம்.
ஆகவே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியகளே, மேல்நிலைப் பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களே நாம் மேற்கொண்டிருப்பது போரரட்டமல்ல, தர்மயுத்தம் என்பதை மறவாதீர். அனைவரும் ஒன்றாய் கூடி நமது வேதனைகளை அரசுக்குத் தெரிவிப்போம் வாரீர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment