இது சார்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Friday, 4 May 2012
Transfer Counselling
அரசுப் பள்ளிகளில், குறிப்பிட்ட
பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை இடமாறுதல் செய்த
பிறகே, ஆசிரியர் பொது மாறுதல் "கலந்தாய்வு'
நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவேதான், கலந்தாய்விற்கான
விண்ணப்பங்கள் பெறுவது
நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு, மே, ஜூன் மாதங்களில்,
பொது பணியிட மாறுதல், "கலந்தாய்வு'
நடத்தப்படும். இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று,
பின் ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்பட்டு,
பொது மாறுதல் "கலந்தாய்வு" நடத்தப்படும். "கலந்தாய்வு ' நடைபெறும் நாளன்று காலையில், காலியிட
பட்டியல் வெளியிடப்படும். அப்போது, பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு
இட மாற்றம் செய்து, உத்தரவுகள்
வழங்கப்படும்.
நடப்பாண்டு கலந்தாய்வுக்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு
வந்த நிலையில், தொடக்க கல்வித்துறை மற்றும்
பள்ளிக் கல்வித்துறை ஆகிய இரு துறைகளிலும்,
கடந்த சில தினங்களாக விண்ணப்பங்கள்
பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
இது சார்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இது சார்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரு துறை சார்ந்த
பள்ளிகளிலும், குறிப்பிட்ட சில பாட ஆசிரியர்கள்
எண்ணிக்கை, அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துப்
பாட ஆசிரியர்களும், சம எண்ணிக்கையில் இருக்க
வேண்டும். இந்த குறையை சரிசெய்யாமல்,
"கலந்தாய்வு' நடத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே,
முதலில் எந்தெந்த பள்ளிகளில், ஒரே பாட ஆசிரியர்கள்
அதிகளவில் இருக்கின்றனரோ, அவர்களை, தேவையான வேறு பள்ளிகளுக்கு
மாற்றி, அதன்பின் ஆசிரியர் மாறுதல் "கலந்தாய்வு' நடத்தலாம் என, அரசு கருதியுள்ளது.
மே இறுதியிலோ அல்லது ஜூன் 15 தேதிக்குள், பொது மாறுதல் "கலந்தாய்வு' நடைபெறும். அரசாணை
வெளிவந்ததும், "கலந்தாய்வு' தேதி முடிவு செய்யப்படும்
எனவும் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment