தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Monday, 27 June 2011
We should oppose anti social elements
சமீப காலங்களில் நாம் தொடந்து பேனாவின் முனைகளால்
தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம் மீது வீசப்படும் அம்புகளுக்கு இரண்டு
உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது அம்புகள் மட்டுமே! வில் எங்கே? அது
உங்களுக்கே தெரியும் நண்பர்களே!
நாம் தயங்கியது போதும் இனியாவது
பதிலடி கொடுப்போம். தயாங்காதீர்.
உதாரணம் 1: ஆசிரியருக்குப்
பாடம்
சொல்வது யார்?
Published in Dinamani Daily on 27 Jun 2011
சமச்சீர் கல்வி, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை
என
கல்வி
சம்பந்தப்பட்ட பல
பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில், ஆசிரியர் சரியாகப் பாடம்
கற்றுத்தராத காரணத்தால் மாணவர்
ஒருவர்
தற்கொலை செய்துகொண்டிருப்பது மேலும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிளஸ்
2 மாணவர் சீனிவாசனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் நடவடிக்கை இருந்திருக்குமா? என்ற
சந்தேகம் நமக்குள் ஏற்பட்டாலும், உயிரிழந்த மாணவரின் 7 பக்கக்
கடிதங்கள் பல
உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவது வருத்தம் தரும்
செய்தியாகும்.
மாணவர் சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், "பனைமரத்துப்பட்டி அரசு
மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் மரணத்துக்குக் காரணம்'
என
வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
கணிதப் பாட ஆசிரியர் பாடம்
நடத்தும் முறை
புரியவில்லை என்பதும், மாணவர்களுக்குப் புரியும்படி பாடம்
நடத்த
வேண்டும் என்பதும்தான் உயிரிழந்த மாணவர்
சீனிவாசனின் கோரிக்கை. இதில்
தவறுகாண முடியாது.
மாணவர்களுக்குப்
புரியும்படி பாடம்
நடத்துவதற்காகத்தானே ஆசிரியர்கள். இல்லையென்றால், பாடப்
புத்தகத்தையும், குறிப்பிட்ட சில
"வழிகாட்டி' நூல்களையும் படித்து அவர்கள் தேர்வு
எழுதிக் கொள்வார்களே? இதற்கு
எதற்குப் பள்ளி?
பின்னர் எதற்கு
ஆசிரியர்கள் என்ற
போர்வையில் சில
சுயநலவாதிகள்?
பொதுவாகவே,
அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும்
குறிப்பிட்ட சில
ஆசிரியர்கள், அரசின்
மாதச் சம்பளத்தைவிட
அதிகம் நம்பியிருப்பது
"டியூஷன்' மூலம்
கிடைக்கும் கூடுதல்
வருவாயைத்தான்.
வகுப்பறையில் சரியான முறையில் பாடம்
நடத்தினால் நம்மிடம் "டியூஷன்' படிக்க
யார்
வருவார்கள் என்ற
எண்ணம்
சில
ஆசிரியர்கள் மத்தியில் இன்னும் உள்ளது.
எனவே,
அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் "டியூஷன்' எடுக்கத் தடைவிதிப்பதே சிறந்தது.
"டியூஷன்' எடுக்காமல் என்னால் இருக்க
முடியாது என
எந்த
ஆசிரியராவது கூறினால், அவரை
அழைத்து, அரசுப்
பள்ளியில் பயிலும் மாணவர்களில் குறைவான மதிப்பெண் பெறுவோரை மட்டும் தேர்வு
செய்து
அவர்களுக்குப் புரியும்படி பாடம்
நடத்துங்கள் (கட்டணம் வசூலிக்காமல்) என
அறிவுரை கூறலாமே!.
மாணவர் சீனிவாசன் இன்று
நம்மோடு இல்லை.
ஆனால்,
அவர்
எடுத்துக்கூறிய உண்மைகள் கவனிக்கப்பட வேண்டியவை. அலட்சியம் செய்யாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது
தக்க
விசாரணை மேற்கொண்டு உரிய
நடவடிக்கை எடுப்பதுதான், இன்னொரு மாணவரின் உயிரைக் காக்க
உதவும்
செயலாகும்.
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்துக்கும்,
பிளஸ்
2 கணக்குப் பாடத்துக்கும் நிறைய
வித்தியாசங்கள் இருக்கும் என்பது
கணிதப்பாடத்தைப் பயின்ற
அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, புரிந்து படிக்க
வேண்டியதை எப்படி
மனப்பாடம் செய்ய
முடியும் என்ற
மாணவர்
சீனிவாசனின் கேள்வி
நியாயமானதுதானே?
கரும்பலகை முழுவதும் கணக்கை எழுதிப்போட்டுவிட்டு, பார்த்து எழுதிக் கொள்ளுங்கள் என்பதற்காகவா மாதம்
பல
ஆயிரங்களைச் சம்பளம் என்ற
பெயரில் வாங்க
வேண்டும். பணம்
சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்றிருந்தால் இவர்கள் ஏன்
ஆசிரியர் பணிக்கு வர
வேண்டும்?
இப்படிக் கரும்பலகையை மட்டும் நம்பி தங்களது குழந்தைகளைப் படிக்க
வைக்கத் தயாராக
இருப்பார்களா இந்த
அறிவு
ஜீவிகள்? தான்
அதிக
சம்பளம் வாங்கி
நன்றாக
இருக்க
வேண்டும், தனது
குழந்தை ஏதாவது
ஒரு
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயில
வேண்டும் என்ற
நினைப்பு மனதில்
இருந்தால் எங்கிருந்து பாடம்
நடத்த
வரும்.
அரசுப்
பள்ளிதானே, தேர்ச்சி
விகிதம் எப்படி
இருந்தால் நமக்கென்ன?
நம்மை யார்
கேள்வி கேட்க
முடியும் என்ற
எண்ணம்தான் இதுபோன்ற
செயல்களில் ஆசிரியர்களை
ஈடுபடச் செய்கிறது. அந்த
அளவுக்கு அரசுப்
பள்ளிகள் மீது
நமது
"அதிகாரி'களின்
பார்வை
உள்ளது.
"எனது
மரணத்தின் மூலம்
அரசுப் பள்ளிகளில்
சிறு மாற்றமாவது
நிகழ வேண்டும்.
திறமையான ஆசிரியர்கள்
அரசு வேலையை
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு வாய்ப்பளிக்க
வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தரமான
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதல்வர் இதற்கு
விரைவில் நிரந்தரத் தீர்வை
எடுக்க
வேண்டும்' என்ற
கோரிக்கையை முதல்வர் பார்வைக்கு கொண்டு
செல்லும்படி உயிரிழந்த மாணவர்
சீனிவாசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களைக்
கைது
செய்வதாலோ, வழக்குப் பதிவு
செய்வதாலோ இந்தச்
சம்பவம் முடிவுக்கு வந்துவிடாது. இன்னொரு மாணவரின் உயிர்
பறிபோகாமல் இருக்க,
மாணவர்
சீனிவாசன் எழுதிவைத்துள்ள கடிதத்தின் கடைசிவரிகளைப் படித்தாலே போதும்.
உதாரணம் 2: கல்வித்துறையில்
கலக்கலாமா அரசியல்?
Published in Dinamani Daily on 25 Jun 2011
கல்வித்துறை களேபரத்துறையாகிவிட்ட
நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் படும்
அவதிகள் ஏராளம்.
அண்மைக்காலமாக கல்வித்துறை தொடர்பான விவாதங்களும், குற்றச்சாட்டுகளும் வேதனையளிப்பதாக உள்ளன.
இதுகுறித்து அமைக்கப்பட்ட கமிட்டிகள் வழக்கம்போல தங்கள்
வேலையை
முடித்துவிட்டு மூட்டைகட்டிக் கொண்டு
புறப்பட்டுவிட்டன. இவர்களின் யோசனைகளை யாரும்
கேட்பதாகத் தெரியவில்லை. மத்திய, மாநில
அரசுகள் நீதிமன்றத்தைக் கைகாட்டிவிட்டு தங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லாததுபோல ஓடி
ஒளிந்துகொண்டன. பலத்த
எதிர்ப்புக்குப் பிறகு
தமிழக
அரசு
9 பேர்
கொண்ட
குழுவை
அமைத்துள்ளது.
இந்த நிலைக்குக் காரணம்
என்ன
என்பதை
முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும். வழக்கம்போல கல்விக்காக வாதாடுபவர்கள், எழுத்தறிவித்தலை அதிகப்படுத்த வேண்டும் என
முழக்கமிட்டவர்கள் இன்று
எதுவுமே செய்யமுடியாமல் நிற்கின்றனர்.
ஆசிரியர் மாணவரைப் பிரம்பால் அடித்துவிட்டாலோ, வேறு
விஷயங்களில் ஈடுபட்டாலோ மார்தட்டிக்கொண்டு மல்லுக்கட்டும் மாணவர்
இயக்கங்கள் இன்று
இருக்கும் இடம்
தெரியாமல் கிடக்கின்றன.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று
தனியார் பள்ளிகள் போர்ப்பரணி பாடுகின்றன. அரசியல் கட்சியினரோ அதிர்ந்துபேச முடியாமல் தவித்து நிற்கின்றனர். எதற்காக இந்தத்
தயக்கம்? மாணவர்கள் படும்
வேதனையை அறிவார் யாருமில்லையா? கல்வியைப் பொருத்தவரை அதை
அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது.
மாணவர்களின் எதிர்கால வாழ்வை
மட்டுமே பார்க்க வேண்டிய தருணம்.
தமிழக
வரலாற்றில் இதுபோன்ற ஒரு
நிலை
ஏற்பட்டதே கிடையாது எனலாம்.
சமச்சீர் கல்வியாகட்டும், பாடத்திட்டங்களாக இருக்கட்டும். எதிர்காலத்தில் அதை
நீதிமன்றம் தன்
பொறுப்பில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நிரந்தரத் தீர்வு
காண
முடியும்.
ஏற்கெனவே
அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர்களுக்கு ஊதியம்
சிறப்பாக வழங்கப்படுகிறது.
ஆனால், கல்வியில்
குறிப்பிடும்படி எந்தத்
தேர்ச்சியையும் அவர்களால்
காட்ட முடிவதில்லை.
ஒருசில பள்ளிகள் மட்டுமே மாநில
அளவில்
சாதனை
படைக்கின்றன. இந்த
நிலையில் தனியார் பள்ளிகள் அனைத்துமே கட்டணத்தைப் பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றன.
தேர்ச்சி விகிதத்தில் நாங்கள் அரசுப்
பள்ளிகளுக்குச் சளைத்தவர்கள் அல்ல
என்பதைப்போல குறைந்த தேர்ச்சி விகிதமே பெறுகின்றன.
எனவே, பெற்றோர் தனியார் பள்ளிகளைக் கைவிட்டு அரசுப்
பள்ளிகளை நாடலாம். இதற்கு அரசு
முதற்கண் செய்ய வேண்டியது,
திறமையான தனியார் பள்ளி
ஆசிரியர்களை தாற்காலிக ஆசிரியர்களாக
நியமிக்கலாம்.
மேலும், தனியார் பள்ளிகளில் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகப் பெற்றோர் புகார்
அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என
கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது நகைச்சுவையான விஷயம்.
ஏனெனில், எந்தப்
பெற்றோர் துணிச்சலாக வந்து
புகார்
தருவார்கள், அப்படியே தந்தாலும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதும், பள்ளிகள் அவர்களைப் புறக்கணிக்கும் என்பதும் தெரியாத விஷயமா
என்ன?
எனவே,
இதுபோன்ற உப்புச்சப்பில்லாத ஆணைகளை
வாபஸ்
பெற்று,
ஆக்கப்பூர்வமாக நடக்க
வேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வதுதான் சாலச்சிறந்தது.
நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னை குறித்து விமர்சிக்காமல் அடுத்ததாக என்ன
செய்யலாம் என்பதில் சமூக
ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்து மாணவ
சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தவிர எந்த
ஆட்சியாளர்களாக இருந்தாலும், கல்வியில் தங்கள்
ஆளுகையைக் காட்டக்கூடாது. மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் அரசியல், தனிமனித துதி
போன்றவை இடம்பெற எக்காலமும் இடமளிக்கக் கூடாது.
கல்வியுடன் அரசியலைக் கலக்காமல் மாணவர்களை அறிவாளிகளாக மாற்ற
வேண்டும். இனியாவது, கல்வித்துறையை சட்டம்
தன்
கைகளில் எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment