கடலோர பகுதிகளில் வானிலை உட்பகுதிகளை காட்டிலும் மிதமாக இருக்கும். உட்பகுதியில் கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் செல்லச்செல்ல வெப்பம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் சூரியனிடம் இருந்து வரும் சிற்றலைகதிர்களை பூமியானது கிரகித்து வெளியிடும் நெட்டலை கதிர்களே ஆகும். இந்த நெட்டலை கதிர்களை பூமியில் உள்ள பசுங்குடில் வாயுக்களான நீராவி, பிராணவாயு, கரியமிலவாயு ஆகியவை கிரகிப்பதால் பூமி வெப்பமடைகிறது. மலை வாச தலங்கள் வெப்பத்தை வெளியிடும் தரையில் இருந்து உயரத்தில் இருப்பதால் மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக உள்ளது.
தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Wednesday, 23 March 2011
World Metrology Day
உலக வானிலை தினம்
உலக வானிலை தினம் மார்ச் 23-ந் தேதி உலகம் முழுவதும் கடை பிடிக்கப்படுகிறது. ’’1950-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி உலக வானிலை கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான கருத்து `உங்களுக்கான காலநிலை' ஆகும்.
பொதுவாக வானிலை வேறு, காலநிலை வேறு என்று மக்கள் எண்ணுவதில்லை. இன்று காலநிலை சரிஇல்லை என்று சொல்வார்கள். அது தவறு. வானிலை என்பது குறிப்பிட்ட பகுதியில் நீண்ட நாட்களாக உள்ளது. உதாரணமாக கொடைக்கானலுக்கு ஜனவரி மாதம் சென்றால் அப்போது என்ன வானிலை இருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் அந்த மாதம் சராசரியாக கம்பளி தேவை என்பது தெரியும். நவம்பர் மாதம் சென்னையில் மழை பெய்யும். இது காலநிலை. அன்று வெப்பம் எவ்வாறு உள்ளது. மழை எவ்வாறு உள்ளது என்பது வானிலை ஆகும். உயரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரிக்கும். கடந்த காலங்களில் புயல் எந்த திசையில் சென்றது என்பதை பதிவு செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் புயல் வரும்போது அது எந்த பாதையில் செல்லும் என்பதை அறியமுடியும். பூமியில் சில இடங்கள் பாலைவனமாகவும், சில இடங்கள் அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. இதற்கு 3 காரணங்களை கூறலாம். 1. புவி மையக்கோட்டில் இருந்து அந்த பகுதி இருக்கும் தூரம், 2. கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது, 3. அந்த பகுதி எவ்வளவு உயரத்தில் உள்ளது ஆகிய மூன்றும் தான் இதை நிர்ணயிக்கின்றன. சூரியனின் நேர் கிரணங்கள் புவி நடுகோட்டில் செங்குத்தாக விழும். நடுகோட்டில் இருந்து நாம் வடக்கிலோ, தெற்கு திசையிலோ செல்லச்செல்ல சாய்கோணத்தில் கிரணங்கள் விழுவதால் வெப்பம் குறையும். குறிப்பாக கடகரேகைக்கு வடக்கேயும், மகரரேகைக்கு தெற்கேயும் வெப்பத்தின் அளவு குறைவாக இருக்கும்.
கடலோர பகுதிகளில் வானிலை உட்பகுதிகளை காட்டிலும் மிதமாக இருக்கும். உட்பகுதியில் கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் செல்லச்செல்ல வெப்பம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் சூரியனிடம் இருந்து வரும் சிற்றலைகதிர்களை பூமியானது கிரகித்து வெளியிடும் நெட்டலை கதிர்களே ஆகும். இந்த நெட்டலை கதிர்களை பூமியில் உள்ள பசுங்குடில் வாயுக்களான நீராவி, பிராணவாயு, கரியமிலவாயு ஆகியவை கிரகிப்பதால் பூமி வெப்பமடைகிறது. மலை வாச தலங்கள் வெப்பத்தை வெளியிடும் தரையில் இருந்து உயரத்தில் இருப்பதால் மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக உள்ளது.
தென்மேற்கு பருவமழையின்போது மேற்கு தொடர்ச்சி மலை காரணமாக தமிழகம் மலை மறைவு பிரதேசமாக உள்ளது. கோவை மாவட்டம் சின்ன கல்லார் என்ற இடத்திலும், நீலகிரி மாவட்டம் தேவாலா (தெந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்பட்ட பகுதி) ஆண்டு மழை சமவெளியை காட்டிலும் மிக மிக அதிகமாக இருக்கும். வானிலை மற்றும் காலநிலை அறிவியல் வளர்ச்சி பெற்று மக்களுக்கு சேவை செய்வதை நினைவு கூரவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment